விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பான தொடர் ‘பகல் நிலவு’. இல்லத் தரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிப்பரப்பானது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பியில் அதிக பார்வையாளர்களை வைத்திருந்தது.
மேலும் இதில் சையது அன்வர், சமீரா, சௌந்தர்யா, விக்னேஷ் கார்த்திக், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடித்த அன்வரும், சமீராவும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு இருவரும் தொடர்ந்து பல சீரியலில்களில் நடித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ சீரியலில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். இதையடுத்து அண்மையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் சமீரா கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கர்ப்பமான நேரத்தில் இப்படி கிரிக்கெட் விளையாடலாமா என கேள்வி எழுப்பி இருந்தனர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் அறிவுரை கூறியுள்ளனர்.
View this post on Instagram