குழந்தைக்கும் தாய்க்குமான உறவை என்ன கொடுத்தாலும் யாராலும் ஈடு செய்யவே முடியாது. உங்க குழந்தை ஆரோக்கியமா இல்ல. வேண்டாம் க லைச்சுடுங்க. இந்தக் குழந்தை பிறந்தா மாற்றுத் திறனாளியாத்தான் பிறக்கும். அந்தக் குழந்தையின் அன்றாட வாழ்க்கைக்கே அது ரொம்ப கஷ்டம் ஆகிவிடும் என்று மருத்துவரே சொன்ன போதும் கூட, அதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த பாசத்தாய் ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாய் ஆகி இருக்கிறார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நடாலி ஹால்சன். 29 வயதான இவர் கருதரித்தார். இந்த விஷயத்தை தன் கணவரிடமும், உறவினர்களிடமும் சொல்லி மிகவும் சந்தோசப்பட்டார். கணவரும் மிகுந்த சந்தோஷமடைந்தது கண்ணும், கருத்துமாக பார்த்து வந்தார். எல்லாம் நல்லபடியாகதான் சென்று கொண்டிருந்தது. 22ம் வாரத்தில் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
ஸ்கேன் செய்து பார்த்த போது தான் கருவில் இருக்கும் குழந்தைக்கு s pina b ifida என்ற நோ ய் தா க்கி இருப்பது தெரிய வந்தது. குழந்தையின் மு துகெழும்பு, த ண்டுவடம் இரண்டும் சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பதுதான் இந்நோ ய்.
இப்படியே விட்டு விட்டால் டெலிவரி ஆன பிறகு குழந்தை வளர வளர தன் அன்றாட வாழ்வை மேற்கொள்ளவே ரொம்ப கஷ்டப்படும். மேலும் அந்தக் குழந்தையின் வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கும்.
எனவே கருவை கலைத்து விடுமாறு அறிவுரை சொல்லியிருக்கிறார் செக்கப் செய்த டாக்டர். அதுவும் ஒருமுறை.. இருமுறையல்ல…பத்துமுறை இப்படியான அறிவுரையை சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த குழந்தை மீது அதிக பாசம் கொண்ட அந்த தாய் அதையெல்லாம் தன் செவிகளுக்கு மட்டுமே ஏற்றினாலே தவிர, மனதுக்குள் கொண்டு செல்லவே இல்லை. க ருவை க லைக்கவும் இல்லை. பத்தாவது மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த குழந்தை மருத்துவர்கள் சொன்னது போல, அந்தக் குழந்தையின் முதுகெழும்பு, தண்டுவடத்தில் பிர ச்சனை இருந்தது. பிறந்த குழந்தைக்கு 12 மணிநேரம் அ றுவை சி கிச்சை நடந்தது.
தாய் நடாலியாவின் கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவரது கைகள் கூப்பிய வண்ணமே இருந்தது. கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருந்தார். இப்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை 90 சதவிகிதம் தேறிவிட்டது.
இதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் அந்த பாசத்தாய் நடாலியா.
மருத்துவர்களே கைவிட்ட நிலையிலும், மனம் தளராத தன்னுடைய பாசத்தால் ஒரு குழந்தையை ஜனனித்து இருக்கிறார் இந்த பாசத்தாய்! இதை கேட்கும்போது நம் கண்கள் கூட கலங்குகிறது.