கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் RJ பாலாஜி, தீபாவளிக்கு Hotstar-இல் Release ஆகிறது, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் !

செய்திகள்

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது.அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். நடிகை நயன்தாராவின் முன்னேற்றத்தை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் இருக்கிறது.

சமீபத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே. பாலாஜியின் கதை , திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘ மூக்குத்தி அம்மன் ‘ ஆகும். இப்போது எப்படியோ படத்தை Successfull-ஆக முடித்துவிட்டு இந்த படம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும்,

அமேசான் நெட்ப்ளிக்ஸ்-இல் ரிலீஸ் ஆகாது என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. ஆனால் தற்போது தனது சொந்த வீடு போல் இருக்கும் Hotstarக்கு விற்றுவிட்டார், விதி வலியது.