நடிகை சில்க் ஸ்மிதா மறக்க முடியாத தடத்தை திரையுலகில் பதித்து விட்டு சென்று விட்டார். தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும், தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர். மயக்கக்கூடிய இமை விழிகளாலும், அழகான உடல் கட்டினாலும் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.
சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர் உணவுக்கே மிகவும் க ஷ்டப்பட்ட காலமும் உண்டு. போ ராட்டமான வாழ்க்கையை சந்தித்த அந்த விஜய லட்சுமியை சில்க் ஸ்மிதா என அடையாளம் காட்டியது வினு சக்ரவர்த்தி தான்.
இப்படியான இந்த நடிகையில் வாழ்க்கை வரலாற்றை அவள் அப்படித் தான் என சித்ரா லட்சுமணன் மற்றும் முரளி இணைந்து தயாரிக்கவுள்ளதாக கடந்த வருடமே அறிவித்தனர். இப்படத்தை தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறாராம்.
மேலும் இப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்க போவது நடிகை ஸ்ரீ ரெட்டியை நடிக்க வைக்கிறார்களாம். என்று தகவல் வெளியாகியுள்ளது.