கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்! பிறந்தநாளை கடலுக்கு நடுவில் கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் நடிகை..!!

செய்திகள்

சினிமாவில் கதகளி என்ற படத்தின் மூலம் 17 வயதில் நடிக்க வந்தவர் வைஷாலி.அதன்பிறகு காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.

மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது இவரது ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இவரது பிறந்தநாளுக்கு கணவர் சத்யதேவ் கடலுக்கு நடுவில் ஒரு கப்பலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.