தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர்கள் மத்தியில் 20களின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் நடிகை பாத்திமா பாபு.
1996ல் கல்கி படத்தின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்த பாத்திமா பாபு தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். பின் பிரபல தொலைக்காட்சியான தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணியாற்றி பின் ஏசியா நெட் நிறுவன தொலைக்காட்சியில் பணியாற்றினார்.
மேலும் இதையடுத்து சில சீரியல்களில் நடித்து வந்த பாத்திமா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல இடத்தினை பிடித்தார். பாத்திமா பாபு பிறப்பில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர். இதையடுத்து பாபு என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இரு மகன்களை பெற்றெடுத்தார். தற்போது பாத்திமா பாபு அவர் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.