கடல் இரண்டாக பிரியும் அதிசயம்…. இந்த மாற்றத்திற்கு இப்படியொரு அதிர்ச்சி காரணமா?

செய்திகள்

கடவுளின் சொந்தநாடு என்று அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை ஊர்தான் புன்னனி. மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள இந்த ஊரில் தான் ஒரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

ஆம் கடல் இரண்டாக பிரிந்த சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தினால் தான் இந்நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இயற்கை மாற்றத்தினால் புன்னனி கடற்கரையிலிருந்து கடலில் 1 கி.மீ வரை மணல்திட்டு உருவாகியுள்ளது. இந்த அதிசயத்தைக் காண கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு குவிந்து வருகின்றனர்.