ஒரே இரவில் கோடீஸ்வரரான ஏழை தொழிலாளி! கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா? இன்ப அதிர்ச்சியில் குடும்பம்!!

செய்திகள்

தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளி ஒருவர் இவர் இரண்டு கற்கள் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சானினியு லைசர் என்பவர் இவர் வடக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இரண்டு டான்சனைட் என்ற ரத்தினக்கற்களை இவர் கண்டுபிடித்தார். மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரத்தினக்கற்களில் இவை மிகப்பெரியது என்று கூறுகின்றன..

இவர் கண்டுப்பிடித்த ஒரு ரத்திக்கல்லின் எடை 9.27 கிலோவும், மற்றொரு கல்லின் எடை 5.8 கிலோவும் உள்ளது. ரத்தினக்கற்களுக்கு அந்த நாட்டின் அரசு 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் அவருக்கு கொடுத்துள்ளன. இவை இந்திய மதிப்பில் சுமார் 25 கோடிக்கும் மேல் இருக்கும்.

மேலும் இதுகுறித்து சுரங்க தொழிலாளி சானினியு லைசர் கூறுகையில் எனக்கு கிடைத்த இந்த பணத்தை நான் வைத்து ஷாப்பிங் மால் மற்றும் ஒரு பள்ளியை கட்ட ஆசைப்படுகிறேன் அவை என் வீட்டிற்கு அருகிலேயே இந்த பள்ளியை கட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த பகுதியில் உள்ள ஒரு சில ஏழ்மையான குடும்பங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். நான் படிக்கவில்லை எனவே இதனால் என் பிள்ளைகள் முன்னெடுத்து நடத்த வேண்டும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.