ஒரு வயது குழந்தை விஷ பாம்பை கையில் பிடித்து விழுங்கியது.. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

செய்திகள்

ஒரு வயது குழந்தை ஒன்று விஷ பாம்பை பிடித்து வாயில் போட்டு திண்ற சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தர பிரதேசம் பரேலியில் உள்ள கிராமம் போலாப்பூரில், பிறந்து ஒரு வருடமே ஆன ஆண் குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருந்துள்ளது.

அப்போது அந்த வழியாக கட்டு விரியன் பாம்பு குட்டி சென்றுள்ளது. அதை கண்டதும் அதன் ஆபத்து உணராத குழந்தை பாம்பு குட்டியை வாயில் போட்டு கடிக்க தொடங்கியுள்ளது.

இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். கூடவே இறந்த பாம்பையும் கொண்டு சென்றுள்ளனர்.

மிகவும் விஷம் வாய்ந்த கட்டு விரியன் பாம்பு குட்டி என தெரிந்ததும் மருத்துவர்கள் விஷ முறிவு மருந்தை செலுத்தி குழந்தையை அவசர சிகிச்சையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.