மகளின் திருமணத்தை நடத்திய தாய், அதே திருமணத்தின் போதே மற்றொரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆ ச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் பெலி தேவி. இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
இவர் பெலி தேவியின் கணவர் 25 வருடங்களுக்கு முன்னரே இ றந்துவிட்ட நிலையில் பெலி தேவி தன் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து அனைவருக்கும் திருமணமும் நடத்தி வைத்துள்ளார். இதையடுத்து, பெலி தேவி ச மீபத்தில் அவரது கடைசி மகள் இந்துவிற்கும் வரன் பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளார்.
இதனால், கோரக்பூரில் 63 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைய மகள் இந்துவிற்கு திருமணம் நடந்த நிலையில், அதே நிகழ்ச்சியில் பெலி தேவி இ றந்த தனது கணவரின் சகோதரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து, மகிழ்ச்சியாக பேசிய பெலி தேவியின் பிள்ளைகள் தனது அம்மா தனக்கென ஒரு வாழ்க்கையை இத்தனை வருடங்கள் க ழித்து ஏற்படுத்தி கொண்டது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.