கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பிபி தன் கைப்பட Love You All என எழுதியிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் எஸ்பிபி குணமடையவேண்டிய உலகமே ஒன்றுதிரண்டு பிரார்த்தனை செய்தது.
இந்நிலையில் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
தினந்தோறும் தனது தந்தையின் உடல்நிலை குறித்தும் எஸ்பி சரண் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 95% சுயநினைவுடன் சீரான உடல்நிலையும் இருக்கிறாராம் எஸ்பிபி, நேற்று பேனா, பேப்பர் கொடுக்கப்பட்ட நிலையில், லேசான கிறுக்கலுடன் Love You All என எழுதியிருக்கிறார்.
மருத்துவர்கள், நர்ஸ்கள், தனக்காக பிரார்த்தனை செய்யும் மக்கள் என்று எல்லோருக்காகவும் இந்த மூன்று வார்த்தைகளை தனது கைப்பட எழுதி உள்ள அந்த புகைப்படம் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.