எஸ்.பி.பி உடல் நிலை தற்போது எந்த நிலையில் உள்ளது… மருத்துவமனை இயக்குனர் வெளியிட்ட தகவல்…!

செய்திகள்

கொரோனா பாதிப்பினால் கடந்த 5ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் எப்பொழுது விரைவில் வீடு திரும்புவார் என்று மக்களும், ரசிகர்களும், பிரபலங்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் பிரபல மருத்துவமனையில் வெண்டிலேட்டா் மற்றும் எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்களின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது நினைவுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவா்கள் பேசினால் அதற்கு அவரால் செய்கைகள் மூலம் பதிலளிக்க இயலுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குறித்த மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், கொரோனா காரணமாக எஸ்.பி.பி.யின் நுரையீரல் பாதிப்படைந்துள்ளது. இதர உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன.

நுரையீரல் பாதிப்பு விரைவில் குணமாகிவிடும். எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் எஸ்.பி.பி.யை அவருடைய மகன் சந்தித்தபோது சைகைகள் மூலம் பதில் அளித்தார். நினைவுடன் உள்ளார்.

ஆனால் தற்போதைக்கு அவரால் பேச முடியவில்லை. உடல்நிலை தேறி வருவதில் ஆரம்ப வெற்றி தென்படுகிறது என்றும் விரைவில் எஸ்.பி.பி. முழுவதுமாகக் குணமடைவார் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.