என்னது! மறுபடியும் முதல்ல இருந்தா இனி புது கண்ணம்மாவின் நடிப்பில் மீண்டும் உருவான மொத்த கதை… வைரலாகும் லேட்டஸ்ட் ப்ரோமோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரையில் ப ர ப ரப்பாக ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலின் கதாநாயகி மாற்றம் குறித்த பேச்சுகள் தான் டிரெண்டிங்கில் உள்ளன. பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் திருமணமாகி 8 வருடங்கள் பி ரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களின் இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை பாரதியிடமும், இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கின்றனர்.

இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகள் தான் என்கிற உண்மை கண்ணம்மாவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் பாரதிக்கு தெரியாது. இதனிடையே தன்னிடம் வளரும் ஹேமா மீது கண்ணம்மா பாசமாக இருப்பதால், ப யத்தில் பாரதி, கண்ணம்மாவுக்கு வி வாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதில் இதுவரை கண்ணமாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன், இந்த சீரியலில் இருந்து வி லகியுள்ள நிலையில், இவருக்கு பதிலாக வினுஷா எனும் புதிய நடிகை கண்ணம்மாவாக நடிக்கிறார். இதற்கென இதுவரை கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் நடந்த அனைத்து பழைய காட்சிகளும் வினுஷாவைக் கொண்டு ரீ ஷூட் செய்த புதிய புரோமோவை தற்போது விஜய் டிவி பதிவிட்டுள்ளது.

கண்ணம்மா கேரக்டருக்காக ரோஷினி ஹரிபிரியன் போலவே டஸ்கி ஸ்கின் டோன் கொண்ட வினுஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாடலிங், ஃபோட்டோஷூட் என பிஸியாக இருந்த வினுஷா, விரைவில் வெளியாகவுள்ள N4 எனும் திரைப்படத்தில் நடித்திருப்பதாக தகவல். ரசிகர்கள் கண்ணம்மாவுக்கென தங்கள் மனதில் தனி இடம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரோஷினி ஹரிபிரியனுக்கு மாற்றாக அவ்விடத்தை நிரப்பவருகிறார் வினுஷா.