என்னது! நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா? இது குறித்து அவரின் முடிவு என்ன தெரியுமா?

செய்திகள்

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்குபவர். இவர் சூர்யா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

மேலும் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தார். கடைசியாக தளபதி விஜய்யுடன் புலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவரை வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒருவர் உங்களுக்கு இந்த ஆண்டு திருமணமா என்று கேட்க அதற்கு ஸ்ருதி இல்லை என பதிலளித்தார்.மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.