நடிகை அனுஷ்கா தமிழில் இரண்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
மேலும் இவர் தெலுங்கு நடிகரான பிரபாஸை காதலிப்பதாக கி சு கி சுகள் வந்தன. இதையடுத்து தொழில் அதிபரை அனுஷ்கா திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் பரவின. இவை அனைத்தையும் மறுத்து வந்துள்ளார் அனுஷ்கா.
அண்மையில் கூட கிரிக்கெட் விரரை காதலிப்பதாகவும் கி சு கி சுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகை அனுஷ்கா அவரை பற்றின செய்திகள் அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அனுஷ்கா நடிப்பில் வெளியான சைஸ் ஜீரோ, இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தை இயக்கிய பிரகாஷ் கோவலமுடி என்பவருடன் திருமணமாக உள்ளதாக புதிய செய்திகள் பரவி வருகின்றது.
மேலும் இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும் ஏற்கனவே திருமணமாகி வி வாகரத்து ஆகியுள்ளது. இரண்டாவது மனைவியாக திருமணம் செய்ய அனுஷ்காவின் பெயர் இடம் பெற்றிருப்பதால் சினிமாத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.