என்னது! நடிகர் பிரபு தேவாவுக்கு ரகசிய திருமணமா? மணப்பெண் இவர் தானா.. வெளியான தகவல் இதோ..!!

வைரல் வீடீயோஸ்

நடனம் என்றால் பிரபு தேவா தான். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என நிகழ்ச்சி கூட டிவியில் நடத்தினார்கள். காதல் ஹீரோவாக தமிழ் சினிமாவை வலம் வந்த அவர் தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிகம் இருக்கிறார்.

சல்மான் கான், திஷா பதானி, ஜேக்கி ஷெராஃப் ஆகியோரை வைத்து அவர் ராதே என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ஏற்கனவே ரம்லத் என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று மகன்கள் இருந்தபோதிலும் நயன் தாராவுடன் ஏற்பட்ட காதல் திருமணம் வரை செல்ல பின் ரம்லத்துடன் விவாகரத்து செய்தார்.

பின் சினிமா, குழந்தைகள் தான் என் வாழ்க்கை. இன்னொரு திருமணம் இல்லை, அந்த நினைப்பும் இல்லை என கூறி அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் சுற்றி வருகிறது.

அப்பெண் அவரின் உறவுக்கார பெண்ணாம். மருத்துவராக இருக்கிறாராம். ஆனால் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.