தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி பின் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்பவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை இந்துஜா. மேயாத மான், மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் இவர் இதையடுத்து நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் போட்டோஹுட் படங்களை த விர்த்து தற்போது புது வகையாக யோசித்துள்ளார். தான் வளர்த்து வரும் நாயின் பக்கத்தில் இருந்த படி இதுதான் என் முதல் மகன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை கூறி கலாய்த்து வருகிறார்கள்.
Hello my first son 😍 #rio #myfirstpet #mommalove pic.twitter.com/qq798q9z1Z
— Indhuja (@Actress_Indhuja) April 21, 2021