என்னது… ஐயா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சரத்குமார் இல்லையாம்.. இவர் தானாம்… இவர் மிகப்பெரிய முன்னணி நடிகராச்சே… யார் தெரியுமா??

செய்திகள்

சினிமாவில் பல்வேறு படங்கள் பல கதைகளை கொண்டு எடுக்கபடுகிறது. அதற்கு காரணம் அந்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் தனி திறமை மற்றும் வேறுபட்ட சிந்தனைகளே ஒவ்வொரு படத்திற்கும் படம் மாறுதலாக இருப்பதற்கு அடித்தளமாக அமைகிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா என்றால் கிராமத்து கதையம்சத்தை கொண்டு எடுப்பார்.

அதே போல் இயக்குனர் சங்கர் என்றால் பிரமாண்டமாக படங்களை எடுப்பார் ஒவ்வொரு இயக்குனர்க்கும் ஒரு மாறுதல் உள்ளது. இவர்களின் வரிசையில் பிரபல இயக்குனர் ஹரி இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரி. இவரது படங்கள் என்றாலே எப்போதும் ப டு வே கமாக கதையம்சத்தை கொண்ட ஆக்சன் படமாக தான் இருக்கும்.

இவர் ஆரம்பத்தில் படத்தில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய கோவில், அருள், வேல் போன்ற பல படங்கள் வெற்றி படமாக அமைந்துள்ளது.

இவ்வாறு இருக்கையில்  ஹீரோவுக்கு முக்கியத்துவம் குடுத்து இவர் எடுத்த சி ங்கம் 3, பூஜை, சாமி 2 போன்ற படங்கள் நினைத்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இந்நிலையில் 2005-ம் ஆண்டு இவர் இயக்கி ஞானவேல் தயாரிப்பில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இரட்டை வே டத்தில் நடித்து பெரும் வெற்றியை அடைந்த திரைபடம் ஐயா. இந்த திரைபடத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நெப்போலியன், பிரகாஷ்ராஜ், லக்ஷ்மி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா தமிழில் அறிமுகமானது கூட இந்த திரைபடத்தின் மூலமாகத் தான். ஹரி அவர்களின் எப்போதும் வேகமாக செல்லும் கதைக்கு அப்படியே மாறுதலாக கதையை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த படம்.

மேலும் இந்த படத்தில் சரத்குமாரின் நடிப்பு பலரால் பாரட்டபட்டதோடு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. இவ்வாறு சரத்குமாரின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்த இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சரத்குமார் இல்லையாம். இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் தேர்வானவர் உலகநாயகன் கமல்ஹாசன் தானாம்.

இயக்குனர் ஹரியும் இந்த படத்தின் தயாரிப்பாளரும்  ஞானவேல் அவர்களும் முதலில் இந்த கதையை கமலிடம் சொல்ல அவரும் கதையை கேட்டு பிடித்து போக இதை தேவர்மகன் அளவில் எடுக்கலாம் கூறினாராம். அதன் பின் என்ன ஆனதோ தெரியவில்லை கமல் இந்த படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில் தான் சரத்குமார் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.