எனக்கு ரொம்ப அ ழுகையா வருது! பெரும் வே தனையில் குக் வித் கோமாளி புகழ்..!அப்படி என்ன ஆச்சு தெரியுமா?

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மக்களால் பெருமளவில் ரசித்து பார்க்கப்படுகிறது.  இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், பவித்ரா,  ஷகிலா ஆகியோர் இறுதி நிலைக்கு தகுதியாகியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வந்து ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா, சரத் ஆகியோர் பெரும் ரகளைகள் செய்து வந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களால் பெருமளவில் கவரப்பட்டு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் புகழ். இந்நிகழ்ச்சி இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

செம ஜாலியாக , அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில்  புகழ் மிகவும் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மிஸ் யூ சோ மச் மக்களே. எனது குக் வித் கோமாளி டீம், ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகையா வருது என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.