எந்த வகை காளான்களை யாரெல்லாம் சாப்பிடலாம் & சாப்பிடக்கூடாது என்ன சத்துக்கள் உள்ளது எந்த வியாதிகளை குணப்படுத்தும் என அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்….

உணவே மருந்து

காளான் மழைக்காலங்களில் தானாக வளரும். அந்த மாதிரியான காளானை சாப்பிடச் சுவையாக இருக்கும். பொதுவாக மழைக்காலத்தில்தான் காளான் முளைக்கும் என்பதால் அதுவரை காத்திருக்காமல் காளானை செயற்கையாக வீட்டிலேயே வளர்த்தும் சாப்பிடலாம்.

100 கிராம் அளவுள்ள காளானில் புரதச் சத்து 35 சதவீதம் உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. வளர் பருவத்தில் இது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.

காளான் இரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படும்.

குறிப்பாக இரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அந்தவகையில் இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகக் காளான் கருதப்படுகிறது.

இரத்த அழுத்தம் ஏற்படும்போது வெளிப்பகுதியில் சோடியம் அதிகரிக்கும்போது உடலின் சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இதனால் இதயத்தின்  செயல்பாடு மாறும்.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் தேவைப்படும். காளானில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அது இதயத்தைக் காக்கும். 100 கிராம்  காளானில் 447 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காளானில் தாமிரச் சத்து இருப்பதால் அது இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும். காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாகும்.

கருப்பைக் கோளாறு உள்ள பெண்களும், குழந்தையின்மை குறைபாடுகளால் அவதிப்படும் பெண்களும் காளான் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.  தினமும் காளான் சூப் சாப்பிட்டு வரும்  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

.

பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸுடன் காளான் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனவாய்ப் புண் போன்றவை குணமாகும். எளிதில்  செரிமானமாவதுடன் மட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்கக் கூடியது. காளான்களில் எல்லா வகை காளான்களையும் உண்ணக் கூடாது. காளானை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.