எதிர்பாராத விதமாக தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் பட இயக்குனர் திடீர் ம ரணம்! சோ கத்தில் திரையுலகம்!

செய்திகள்

விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் சென்னையில் நேற்று கா லமானார். சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபுசிவன், கடந்த சில நாட்களாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உ யிரிழந்தார்.

மறைந்த இயக்குனர் பாபு சிவனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபல இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்தவர் பாபுசிவன். விஜய் நடித்த “குருவி” திரைப்படத்தின் வசனங்களை பாபுசிவன் எழுதியிருந்தார். 2009 ஆம் ஆண்டு விஜய் நடித்த “வேட்டைக்காரன்” திரைப்படத்தை இயக்கினார் பாபுசிவன்.

இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக “வேட்டைக்காரன்” விளங்குகிறது. இயக்குனர் பாபு சிவனின் ம ரணம் திரையுலகத்தை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் பலரும் அவருக்கு ஆழ்ந்த இ ரங்கலை தெரிவித்து வருகின்றனர்.