உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்,இந்த பதிவை யாரும் பார்த்துவிட்டு செல்லாதீர்கள் படித்துவிட்டு செல்லுங்கள் …

செய்திகள்

உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்,இந்த பதிவை யாரும் பார்த்துவிட்டு செல்லாதீர்கள் படித்துவிட்டு செல்லுங்கள் …

தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மிக மிக கவனமாக இருங்கள் நமக்கு எண்ணற்ற வேலைகள் இருக்கும் அதற்காக அதையே எண்ணி நினைத்து வாகனங்களை இயக்க வேண்டாம்.

எந்தொரு நிகழ்வாயிருந்தாலும் எப்படிபட்ட அவசரமாக இருந்தாலும் ஐந்து நிமிடம் தாமதமாவதில் தவறு ஒன்றுமில்லை தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள் இந்த விசியத்தில் மிக மிக கவனம் தேவை
நாம் சரியாக தான் இருக்கிறோம் என்று நினைப்போம் ஆனால் நம்மைப் போன்றே எல்லோரும் இருப்பார்கள் என்று யாரும் எண்ண வேண்டாம்

குறிப்பாக தாய்மார்களும் தங்கைமார்களும் அக்காமார்களும் வாகனங்களை இயக்கும் முன்பு தங்களின் ஆடைகளை ( துப்பட்டாக்களையும் முந்தாணிகளையும் ) நன்றாக கட்டிக் கொண்டு வாகனங்களை இயக்குங்கள்.

வாகனத்தின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு பல விபத்துக்கள் ஏற்படுகிறது சற்று கவனத்துடன் இயக்குங்கள் உறவுகளே … தயவு செய்து தங்களின் பாதம் தொட்டுக்கேட்டுக் கொள்கிறேன் வாகனத்தில் செல்லும் போது மிக மிக கவனமாக இருங்கள் நான்கு புறமும் பார்த்துவிட்டு வாகனங்கள் வரவில்லையென்றால் மட்டும் வாகனத்தைத் திருப்புங்கள் ஏனென்றால் வாழ்க்கை என்பது ஒருமுறை தான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள் நமக்காகக் குடும்பம் ஒன்று காத்துக் கொண்டிருக்கின்றது என்பதை மறவாதீர்கள் உறவுகளே

உயிர் என்பது உன்னதமான ஒன்று உயிராய் நேசித்தவர்கள் உடனில்லாத போது தான் அதற்கான வலிகள் புரியும் அந்த வலி யாருக்கும் ஏற்பட்டக்கூடாது

இந்த பதிவுகள் ஆண் பெண் என எல்லோருக்குமாக தான் பதிவிடுகிறேன் யாரையும் இதில் குறிப்பிட்டு கூறவில்லை உறவுகளே …தயவு செய்து விழிப்புணர்வுடனிருப்போம்.

பெண்களை பைக்கில் அழைத்து செல்லும்போது அவர்கள் துப்பட்டாவையை, சேலை முந்தாணையையோ பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களா என்பதில் கவனமாக இருக்கவும். இல்லையேல் விபத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.