உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து இதுவா? உங்கள் குணத்தை சொல்லும் ஜப்பான் நாட்டின் பிரபல ஜோதிடம்

ஆன்மிகம்

பெயர் சம்பந்தமான ஜோதிடம் ஒரு வகையினர் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஜப்பான்  நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை வெவ்வேறாக இருக்கும். நம் நாட்டில் ஜாதகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜப்பான் நாட்டினர் நேமாலஜி எனப்படும் பெயருக்குக் கொடுக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டு ஜோதிட முறைப்படி ஒருவரது பெயரின் மூன்றாவது எழுத்துத்தான், அவரது வாழ்க்கையை தீர்மானம் செய்கிறதாம்.

அந்த வகையில் மூன்றாவதாக வரும் ஆங்கில எழுத்தின் குணநலனை கொடுத்திருக்கிறோம். படித்து ரசியுங்கள், உங்கள் குடும்பத்தார், நண்பருக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I-என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K- என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q – என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R– என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.