உங்களுக்கே தெரியாம நீங்க செய்யும் இந்த ஒரு சின்ன சின்ன தவறுகள் தான் நீங்கள் கோடீஸ்வரனாவதைத் தடுக்கும்…! இனி இந்த தவற செய்யாதீங்க…!!

ஆன்மிகம்
நாம் வீட்டில் செய்யும் சில தவறுகளின் காரணமாக நம் வீட்டில் செல்வம் சேராமல் போகிறது. ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களில் மாற்றம் செய்து வந்தால் வீட்டில் செல்வம், பணம் ஆகியவை தடையில்லாமல் வந்துக்கொண்டிருக்கும்.
மேலும் நாம் செய்யும் இந்த சிறு தவறுதலால் வீட்டில் பணம் சேருவதை தடுக்கிறது. பெண்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது பூஜையின் போது பெண்கள் தங்கள் கைகளில் விளக்கேற்ற வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆண்கள் விளக்கு ஏற்றி வந்தால் அந்த வீட்டில் விட்டில் செல்வம் தங்காது என்று சொல்கிறது சாஸ்திரம். மேலும் சுத்தம் இல்லாத இடத்தில் சனிபகவான் தாராளமாக வாசம் செய்வார். ஆனால் மகாலட்சுமி வாசம் செய்வதற்கு முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி வீட்டை சுற்றி ஒட்டடை இருந்தால் அந்த வீட்டில் செல்வம் தங்காது. மேலும் அதே போல் வீட்டின் சுவற்றில் கரையான் புற்று கட்டியிருந்தாலும், பூரான் அடிக்கடி வந்தாலும் அந்த வீட்டில் செல்வம் சேராது.
மேலும் சில வீடுகளில் எச்சில் பாத்திரம் சேர சேர உடனே கழுவிக் கொண்டே இருப்பார்கள். மேலும் அதை அப்படியே போட்டு வைக்க கூடாது. அவர்களிடம் செல்வம் அதிகமாக சேரும். அதுமட்டுமின்றி எச்சில் பாத்திரத்தை அப்படியே போட்டு வைப்பவர்களிடம் செல்வம் சேர வாய்ப்பு இல்லை.
மேலும் வீட்டில் இருள் எப்போதும் இருக்கக்கூடாது. சிறு வெளிச்சமாவது இருக்க வேண்டும். வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் வீடு இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம் மற்றும் பணவரவு தடைப்பட்டு வரும். என சாஸ்திரம் கூறுகிறது.
அதேபோல் ஒரு வீட்டில் அன்னபூரணியை அவமதித்தால் அந்த வீட்டில் செல்வத்தை தடுக்கும் சாபம் உண்டாகும். மேலும் வீட்டில் சமையலறையில் எந்த ஒரு பொருள் தீர்வதற்கு முன்பு அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அரிசி, உப்பு, பால், சர்க்கரை இந்த நான்கு பொருட்கள் தீரும் வரை வாங்காமல் இருப்பதால் நம் வீட்டில் செல்வ வளத்தை தடுக்கிறது.
மேலும் இதேபோல் சிறு சிறு விஷயங்களில் மாற்றங்களை உண்டாக்கினால் வீட்டில் செல்வம், பணம் ஆகியவை வந்துக் கொண்டே இருக்கும்.