இ றந்த தன் கணவர் கூறிய ரகசியத்தை உடைத்த மேக்னா ராஜ்! அப்படி என்ன ரகசியம் தெரியுமா?

செய்திகள்

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி மா ரடைப்பால் ம ரணம் அடைந்தார்.
அப்போது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். அதன் பின் கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிரஞ்சீவியே குழந்தை வடிவில் மீண்டும் வந்து விட்டதாக அவரின் தம்பியும், நடிகருமான த்ருவா சார்ஜா தெரிவித்தார்.

அந்த குழந்தை சிரஞ்சீவியின் மறு பிறவி என்றே அவரின் குடும்பத்தார் கருதுகிறார்கள். குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி குழந்தையை தொட்டிலில் போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில், கணவரை இ ழந்தது குறித்து மேக்னா ராஜ் தற்போது கூறியதாவது, “நான் ஸ்டிராங்கானவளா என்று எனக்கு தெரியவில்லை. சிரு இ றந்த பிறகு என் வாழ்க்கையின் அடித்தளமே ஆடிப் போய் விட்டது போன்று உணர்ந்தேன்.

ஆனால் எதையுமே திட்டமிட்டு செயல்படுபவள் நான். சிருவோ அந்த நிமிடத்தை ரசித்து வாழ்பவர். என்னையும் அப்படி இருக்குமாறு கூறினார். அவரின் ம ரணத்திற்கு பிறகே, தற்போதைய நிமிடத்தை ரசித்து வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதை கற்றுக் கொண்டேன். அவர் சொன்ன போது புரியவில்லை தற்போது புரிகிறது.

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். சிரு இ றந்த பிறகு நான் தைரியமாக இருப்பதாக அனைவரும் தெரிவித்தனர். ஆனால் நானோ இந்த வாழ்க்கையை வாழத் தான் வேண்டுமா என்று நினைத்தேன். என் மகனுக்காகவாவது நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்” என்றார்.