அமெரிக்காவில் தாய் இ றந்து 10 நாட்கள் கழித்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் சிகாகோவைச் சேர்ந்தவர் மார்லன் ஓச்சோ லோபஸ். 19 வயதாகும் இவர் கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி த வீட்டை விட்டு வெளியே சென்றவர்,
அதன் பிறகு மீண்டும் அவர் வீடு திரும்பவே இல்லை. இது குறித்து வி சாரனை மேற்கொண்டதில் ஒன்பது மாத கர்ப்பிணியான அவர் ஃபேஸ்புக்கில் ‘ஹெல்ப் எ சிஸ்டர்’ என்ற குரூப்பில் இணைந்துள்ளார்.
அதன் மூலம் 44 வயதுடைய ஒரு பெண்மணியின் நட்பு மார்லனுக்கு கிடைத்துள்ளது. கடந்த மா தம் அவர் குழந்தைகளின் உடைகள், தொட்டில் போன்றவற்றை மார்லனுக்குத் தருவதாக கூறியுள்ளார். அதை வாங்குவதற்காகச் சென்ற போதே மார்லன் காணாமல் போயுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த சமயத்தில், சிகாகோ நகரில், இளம்பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பொ லிசாருக்கு தகவல் வந்ததையடுத்து, பொ லிசார் இளம் பெண்ணின் உடலை கை ப்பற்றி உடற் கூறாய்வு மேற்கொண்டதில் அது மார்லன் என தெரிய வந்தது.
மேலும், அவரின் வயிற்றில் இருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. இந்த நிலையில், மார்லன் காணாமல் போன அதே நாளில் மற்றொரு இடத்தில் கா யமடைந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மார்லனின் மரபணுவையும், குழந்தையின் மரபணுவையும் வைத்து நடந்த சோ தனையில் அது மார்லனின் குழந்தைதான் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை மிகவும் ஆ ப த்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.