பிரியா ஆனந்த்

இவளோ பெருசா எப்படி பராமரிப்பிங்க புகைப்படத்தை பார்த்து பயந்து போன ரசிகர்கள்…!!!

செய்திகள்

தற்போது வளர்ந்து வரும் தமிழ் சினிமா நாயகி பட்டியலில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த் . இவர் தமிழில் வாமனன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழ் பேசத் தெரிந்த சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

பிரியா தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்கள் என்றால் 180, இங்கிலீஷ் விங்கிலிஷ், இரும்பு குதிரை, வை ராஜா வை, எதிர்நீச்சல், எல்கேஜி போன்ற படங்கள் இவர் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்றன.

தன் சக நடிகர்களிடம் நட்பாக பழகி வரும் பிரியா சில நடிகர்களிடம் கிசுகிசுக்களில் மாட்டினார். அசோக் செல்வன், கவுதம் கார்த்திக் போன்ற நடிகர்களை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பிரியா ஆனந்த்திற்கு ரசிகர்களும் நிறைய உள்ளன. இவருக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் . இவர் நாய்களோடு இருக்கும் நிறைய புகைப்படம் இணையத்தில் பல வந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெரிய நாயை கட்டிப்பிடித்து தழுவும் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவளோ பெருசா எப்படி பராமரிப்பிங்க என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.