விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் இவன் வேற மாதிரி. இப்படம் விக்ரம் பிரபு வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் படத்தின் கதையம்சம் மற்ற படங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக காணப்பட்டது.
பெரிய பொருட் செலவு செய்யாமல் எடுத்த இப்படம் பெரிய வசூலை பெற்றது. அப்போது விக்ரம் பிரபு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளில் நடித்து வந்ததால் இவருடைய சினிமா மார்க்கெட் உயர்ந்திருந்தது.
இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த சுரபிக்கு அம்மாவாக ஷர்மிளா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அதற்கு காரணம் சுரபியை முதலில் வெ றுத்து ஒ துக்குவார்.
சுரபி காணாமல் போன பிறகு அவரை ஏங்கித் த விக்கும் காட்சிகள் அனைத்திலும் தனக்கென ஒரு சில ரசிகர்களை உருவாக்கினார். பல படங்களில் நடித்துள்ள ஷர்மிளா. ஆர்த்தோ பி ரச்சனையால் தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் கேட்ட பணம் கொடுக்க முடியாததால் அரசு ம ருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இவரை பார்த்த பலரும் நீங்கள் நடிகை தானே எதற்கு அரசு மருத்துவமனைக்கு வந்தீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு இவர் நான் பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் என்னிடம் எந்த பணமும் இல்லை. அதனால இந்த நிலைமை என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களுக்கு இந்த மாதிரியான நிகழ்வுகள் வருவது சாதாரணம் எனவும் கூறியுள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் கன்னி ராசி.