நடிகை தன்ஷிகா இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பேராண்மை’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். மாஞ்சாவேலு, அரவான், பரதேசி, விழித்திரு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்னர் ரஜினியின் கபாலி படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார் நடிகை தன்ஷிகா.
இதனையடுத்து காலா படம் தன்ஷிகாவுக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்ததுடன் அவரை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் நடிகையாக மாற்றியது. இந்நிலையில், இவர் சில வருடங்களாகவே தமிழர்களின் தற்காப்பு மற்றும் வீர விளையாட்டான சிலம்பக் கலையை கற்றுத் தேர்ந்துள்ளார்.
இந்தநிலையில் நடிகை தன்ஷிகா டீ சர்ட் அணிந்துகொண்டு, மழையில் நனைந்துகொண்டே சிலம்பத்தை சுற்றும் வீடியோ ஒன்றை எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “சிலம்பம் கற்றுக்கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது. பவர் பாண்டியன் மாஸ்டருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Crazy Silambam lady is back!🙏😀
It’s a true experience to do silambam when it’s raining #nothingcanstopyou #determinedmindset #runbabyrun🏃 #mindovermatter👊 #womenwhohustle 🧚🏼♀️
Video credits: Silambam aasan power Pandian master! 😇 pic.twitter.com/EAqyDjECEp— சாய் தன்ஷிகா (@SaiDhanshika) November 7, 2020