மறைந்த பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியா கி சூப்பர் ஹிட்டடித்த அரசியல் திரைப்படம் தான் “கோ“. ஆ யுத எழுத்து படத்திற்கு பிறகு இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அழுத்தமாகச் சொன்ன திரைப்படம்.கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான இந்த திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
நல்ல வசூல் சாதனை செய்த இந்த படமானது, அன்றைய தேதியிலேயே கிட்டத்தட்ட 50 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளிவந்தன.இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக 90களில் சிறந்த நடிகையான முன்னாள் நடிகை “ராதா”வின் மூத்த மகள் கார்த்திகா நடித்திருந்தார்.ஐவரும் தனது பங்கிற்கு சிறந்த நடிப்பைனை வெளிப்படுத்தி இருந்தார்கள் ..
கார்த்திகா அவருக்கு இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை பியா முக்கிய கதாபாத்திர த்தில் நடித்திருந்தார்.அவர்களை த் தொடர்ந்து அஜ்மல், ஜெகன் போன்றோரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
அன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்திய படமாகவு ம் இந்தப் படம் மாறியது.”கோ” பட த்தில் ஜீவாவுக்கு பதிலாக முதல் முதலில் சிம்பு நடிக்க இருந்தார் என்ற செய்தியை கே.வி.ஆனந்த் பல ப ட்டிக ளில் குறிப்பிட் டுள்ளார்.அந்த படங்கள் கூட தற்போது வெளியாகியுள்ளது.