இளம் திருநங்கையின் கண்ணீர் வாழ்க்கை!! அவரை இன்று உலகமே வியக்கும் அளவிற்கு செய்த சாதனை என்ன தெரியுமா?

செய்திகள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் திருநங்கை நிஷா ராவ் தற்போது தனது படிப்பை முடித்துள்ளார். அவரின் வாழ்க்கையில் பல துன்பங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். 28 வயதாகும் இளம் திருநங்கை நிஷா ராவ்க்கு தனது 18 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்துள்ளார்.

அதன் பின்னர் தான் திருநங்கை என்பதை உணர்ந்து கொண்ட  அவர் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவரை போன்று இருக்கும் திருநங்கைகளிடம் சேர்ந்து கொண்ட  அவர் வயிற்றுப் பிழைப்பிற்காக என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் இரண்டு வழி தான் நம் முன்பு இருக்கிறது. ஒன்று பிச்சை எடுப்பது அல்லது பாலியல் தொழில் செய்வது. தான் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். என்பதில் மிகவும் உறுதியாக இருந்த அவர், பிச்சை எடுத்து அந்த பணத்தில் படித்துக் கொள்ளலாம். என முடிவு செய்து சாலையில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அதில் கிடைத்த பணத்தை வைத்து சட்டம் தொடர்பான வகுப்புகளுக்குச் சென்று கல்வி பயின்றார். நாட்கள் உருண்டோடிய நிலையில், தற்போது தனது படிப்பை முடித்த நிஷா, திருநங்கைகள் தொடர்பான வழக்குகளில் போராடி பலரது பாராட்டைப் பெற்று வருகிறார். இதுகுறித்து நிஷா கூறுகையில், ”இதோடு நில்லாமல் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக வருவதே எனது லட்சியம் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.