இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைப்பது ஏன்?… அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு

உணவே மருந்து
வெங்காயத்தை சமைத்து சாப்பிட்டால் தான் நன்மை என்றில்லை. பச்சையாகவும் நமது உடலுக்கு நன்மையைத் தருகிறது. வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து கொண்டால், நமது உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம். இந்த ஆசிட் இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளையும் வழங்குகிறது.
இரவில் படுக்கும் போது பாதங்களில் வெங்காயத்தை வைத்து கொண்டு தூங்குவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
இரத்தம் சுத்தமாகும்
இரவில் படுக்கப் போகும் முன் பாதத்தில் வெங்காயத்தை வைத்தால், வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, நமது சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
பாக்டீரியாக்களை அழிக்கும்
வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிக அளவில் உள்ளது. எனவே வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு படுத்தால், இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
இதய ஆரோக்கியம்
வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்குவதால், இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து நிச்சயமாக விடுபடலாமாம்.
கழுத்து வலி, காது வலி நீங்கும்
பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், உங்களுக்கு அடிக்கடி தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி மற்றும் காது வலி போன்றவை நீங்குமாம்.
வயிற்று பிரச்சனைகள்
முக்கியமாக வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், வயிற்றிலுள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நீங்கிவிடுமாம். அதுமட்டுமின்றி சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் கூட குணமாகிவிடுமாம்.
குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள்
உங்கள் குடல் மற்றும் சிறுநீர்ப்பையில் பிரச்சனைகள் இருந்தால்தூங்கும் போது வெங்காயத்தை பாதங்களில் வைத்துக் தூங்கினால் குணமாகும். வெங்காயத்தை பாதத்தில் வைப்பதால் உடலில் வெப்பம் ஏற்பட்டு பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
This image has an empty alt attribute; its file name is குடல்.jpg
துர்நாற்றமிக்க பாதம்
மேலும் உங்கள் பாதங்களில் தூர்நாற்றம் ஏற்பட்டால் தினமும் வெங்காயத்தை பாதங்களில் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால் பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் மறைந்து விடும்.
சளி, காய்ச்சல்
உடலில் சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் போது வெங்காயத்தை உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்கினால் சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.