இரண்டு வயது இரட்டை சகோதரர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பெரும் சாதனை படைத்துள்ளார்கள்!!

செய்திகள்

இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வயது மூன்று மாதமே ஆனா நிலையில் அவர்கள் அனைத்து மாநிலங்களின் தலைநகரை கூறி இவர்கள்  இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கமுதி எனும் பகுதியில் வசிக்கும் தம்பதி ராமசாமி பவானி. இவர்களுக்கு ஹரிஷித், ஹர்ஷித் ஆகிய இரட்டை பிள்ளைகள் உள்ளன. இரண்டு வயது மூன்று மாதங்களே ஆன இந்த சிறுவர்கள். இருவரும் அதிக நினைவாற்றலை கொண்டிருப்பதை  உணர்ந்த பவானி இவர்கள் இருவருக்கும் மாநிலங்களின் தலைநகர், சின்னம், திருக்குறள், தமிழ் மாதம் என பல்வேறான விஷயங்கை சொல்லிக் கொடுத்துள்ளார்.

மேலும் அதன் படி அப்படியே கற்றுக் கொண்ட இந்த இரட்டை சிறுவர்கள் அசால்ட்டாக எல்லாத்தையும் கற்றுக்கொண்டு ஒப்பித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த சிறுவர்கள் இருவரும்  தங்களின் நினைவாற்றல் காரணமாக  ஹரியானா மாநிலத்தில் இருக்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இவர்கள் இருவரும்  இடம் பெற்றுள்ளனர். மேலும் இதனை அறிந்த ராமநாதபுரம் ஆட்சியர் இந்த சிறுவர்களையும்  அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி சிறுவர்களின் நினைவாற்றலை கண்டு வியந்து போன மாவட்ட ஆட்சியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில் சிறுவர்களின் தாய் பவானி அங்கன்வாடி பணியாளராக  பணியாற்றி வருவதன் காரணமாக அந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது போல இவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவர்கள் இடம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியை கொண்டுள்ளது. என்று தெரிவித்துள்ளன. மேலும் பவானி இவர்களை போல அங்கன்வாடியில் இருக்கும் சிறுவர்களையும் சாதனை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.