இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் இரண்டாம் பாகம் நடிக்க உள்ளாரா.. யார் தெரியுமா?

செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார், இந்த படத்தின் இரண்டாம் பாதியை இயக்க முடிவு செய்துள்ளார் என்றும் இது குறித்து பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்த நடித்த இன்னொரு வெற்றி திரைப்படமான ’மாயா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக உள்ளதாம். இதுகுறித்து திரைக்கதையை இயக்குநர் அஸ்வின் சரவணன் முடித்து விட்டதாகவும் விரைவில் அவர் நயன்தாராவுடன் அந்த கதையை காண்பித்து ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களும் இன்னும் ஒரு சில நாட்களில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது இந்த தகவல் உண்மை என்றால் ஒரே நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய இரண்டு படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டும் காதல், மூக்குத்தி அம்மன் உள்பட ஒருசில படங்களில் நயன்தாரா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.