இரண்டு நாட்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா…? உடல் உறுப்புகள் பாதிக்கப்படுமா…?

உணவே மருந்து

சிலர் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரண்டு மற்றும் மூன்று நாட்கள் கூட சாப்பிடாமல் இருக்கின்றன. உண்மையில் இரண்டு நாட்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்க்கலாம்.

மேலும் தசைகளில் இருக்கும் கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. இவை இரண்டும் உடலில் குறைந்துவிட்டால் உடலில் உள்ள கொழுப்புகள் எல்லாம் கரைய ஆரம்பிக்கும்.

பிறகு செல்களில் இருக்கும் புரதத்தை நம் உடல் எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த நிலைக்கு கெடோசிஸ் (ketosis) என்று பெயர். நம் உடலில் இதயத் தசைகள் வலுவிழப்ப செய்வதால் அவை இரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறைகிறது அதுமட்டுமின்றி அல்சர் ஏற்படும். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து முடி உதிரும் நிலை ஏற்படும்.

மேலும் நம் உடலில் 72 மணி நேரத்தைக் கடந்து விட்டால் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்து விடும். மேலும் இதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மரண நிலைக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உண்டாக்கி விடும்.

நம் உடலில் முதலில் சிறுநீரகம் மற்றும் இதயம் பாதிப்படைகிறது. அடுத்தபடியாக உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்க ஆரம்பித்து விடும். சிலர் உணவில்லாமல் எழுபது நாட்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

மேலும் உணவில்லாமல் ஒருவர் எத்தனை நாட்கள் உயிர் வாழலாம் என்பதை அவர்களின் உடல்நிலையை பொறுத்தே உள்ளன.