இரண்டு குழந்தை இருக்கும் நிலையில் கட்டாய திருமணம் செய்யும் தேவயானி.. இரண்டாவது திருமணம் செய்யும் மாப்பிள்ளை யார் தெரியுமா ??

கிசுகிசு

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்தவர் தேவயானி.90கள் முதல் 2000 பின்பாதி வரை ஒரு நல்ல நடிகையாக பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.விஜய் அஜித் என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து கலக்கியுள்ளார்.

பிறகு கதாநாயகியாக தனது சினிமா வாழ்க்கை நிறைவுக்கு வரும் நிலையில் சினிமாவை விட்டு ஒதுங்காமல் சின்னசின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே நிலைத்து நின்றார்.சுந்தர் சியுடன் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்னர் முழுவதுமாக தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் மிகவும் முக்கியமான சீரியலாக தேவயானிக்கு அமைந்துள்ளது.

கணவனை இழந்த பெண்ணாக இந்த சீரியலில் நடிக்கும் தேவயானிக்கு தற்போது இரண்டாம் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர்.சந்தோஷ் இந்த விஷத்தை பிளான் செய்வது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் என்பதால் இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

ப்ரோமோ வீடியோ இதோ..