இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட பிரபல நடிகை அனுஹாசன்!! முதல் கணவரை பிரிந்ததற்கான காரணம் என்ன தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில்  கலைக் குடும்பமாக காணப்படும் கமல்ஹாசன் குடும்பத்தில் பிறந்தவர் அனுஹாசன். கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகள் தான் அனுஹாசன். அனுஹாசன் தனது பள்ளிப் படிப்பை திருச்சி செயின்ட் ஜோசெஃப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார்.

பிறகு, ராஜஸ்தான் பிட்ஸ் பிலானியில் எம்.எஸ்.சி, பிஸிக்ஸ் மற்றும் மேலாண்மை படித்தார். கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான இந்திரா திரைப்படத்தின் மூலம் திரை துறைக்குள் நுழைந்த அனுஹாசன் பின்னர் ரன், ஆளவந்தான், ஆஞ்சனேயா, ஆதவன், வல்லதேசம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.

இதோடு தொலைக்காட்சி தொடரிலும் நடித்த அவர் தொகுப்பாளினியாகவும் விளங்கினார். அனுஹாசன் முதலில் டெல்லியை சேர்ந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால் க ருத்து வேறுபாடு காரணத்தால் திருமணமான குறுகிய காலத்திலேயே பிரிந்து வாழ துவங்கிய இவர்கள் பிறகு வி வாகரத்து செய்து கொண்டனர்.

அது குறித்து அனுஹாசன் முன்னர் கூறுகையில், நானும் விகாசும் காதல் திருமணம் செய்தோம். நாங்கள் காதலித்த போது எல்லாம் நல்லபடியாக சென்றது.ஆனால் திருமணத்துக்கு பின்னர் அப்படி இல்லை, என் திருமணத்தை காப்பாற்ற நான் முயற்சி செய்தேன் ஆனால் அது நடக்க வில்லை.

என் முன்னாள் கணவர் ஒரு நல்ல மனிதர் ஆனால் எனக்கானவர் இல்லை என கூறியிருந்தார். இதன் பின்னர் லண்டனை சேர்ந்த கிரஹாம் ஜே என்பவருடன் காதல் வயப்பட்டார் அனுஹாசன். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அனுஹாசனுக்கு இசை சார்ந்த ஒரு வலைதளத்தின் மூலமாக  கிரஹாம் ஜே இடையே நட்பு உண்டானதாக அறியப்படுகிறது.

பிறகு, இந்த நட்பு மெல்ல, மெல்ல காதலாகி, பின்னர் திருமணமும் செய்து கொண்டன. இந்த ஜோடி. தற்சமயம் #HalfLifeFit என உடற் பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அனுஹாசன் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார்.