டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம்’ போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவரின் அக்கா சஞ்சனா கல்ராணியும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கல்ராணி கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் சஞ்சனா நடித்திருக்கிறார். தற்போது, சஞ்சனா கல்ராணி தமிழ் திரையுலகிலும் ‘பாக்ஸர்’ படத்தின் மூலம் என்ட்ரியாகவுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கவிருக்கிறார்.
அவ்வபோது தனது புகைப்படங்களை சஞ்சனா சமூக வலைதளங்களில் வெளியிடுவார். இந்நிலையில், க வர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சஞ்சனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.