இன்று முதல் வீடு தேடி வருகிறது ஆயிரம் ரூபாய் நிவாரணம்! கொரோனா சமயத்திலும் முதல்வரின் அதிரடி!

செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பா திக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், ப லியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜூன் 19 முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள இந்த பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த தொகை இன்று முதல் சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. வருகிற 26ந்தேதி வரை ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற உள்ளது.