இனிப்பு அதிகமுடைய உணவுகளை சாப்பிட்டால்.. சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

உணவே மருந்து

நாம் உண்ணும் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளும் அதிகப் படியான சர்க்கரை இரத்தத்தில் கலந்து நம் சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜென் செல்களுடன் இவை சேருகின்றன.

அப்பொழுது சருமத்தில் கிளைகேஷன் என்ற ரசாயன மாற்றம் நிகழும் போது இவை கொஞ்சம் கொஞ்சமாக டெர்மிஸ் லேயரில் படியத் தொடங்கும். ஏஜிஈ படிவது அதிகரிப்பதன் காரணமாக எலாஸ்டின் கொலாஜென் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை இவை இழப்பதால் சருமம் முதிர்ச்சியுடன் தோன்றுகிறது.

மேலும் உணவை உண்ணும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவில் அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை கலந்த மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிக கிளெசெமிக் கொண்டவையாக உள்ளன.

மேலும் பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுகளில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. மேலும் அதிக இனிப்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால் சருமத்தில் வீக்கம், பருக்கள், சோரியாசிஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

அதுமட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். உடலில் தொடர்ந்து பருமன் அதிகரிக்கும். இவையெல்லாம் வருவதற்கு காரணம். அதிக இனிப்புள்ள உணவுகளை உட்கொள்வதால் ஏற்படுகின்றன.