எந்த சூழலாக இருந்தாலும் தளராமல், தன்னம்பிக்கையோடு உழைக்கக் கூடிய மகர ராசி அன்பர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அலைச்சலும், கடனும், புதிய பொறுப்புக்களால் பணிச்சுமையும் ஏற்படக்கூடும்.
அடுத்து வரும், குரு, சனி பெயர்ச்சியும் பெரியளவில் சாதகமாக இல்லாததால், குரு மட்டும் ஓரளவு நல்ல பலன்கள் தருவார் என்ற நம்பிக்கையில் சற்று கடினமான நிலையில் மகர ராசியினர் பயணிக்க உள்ளனர்.
ராகு கேது பெயர்ச்சி எப்போது?
முக்கிய கிரக பெயர்ச்சிகளில் ஒன்றாக ராகு கேது பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1ம் தேதி (ஆவணி 16) வாக்கிய பஞ்சாங்கத்தின் படியும், செப்டம்பர் 23 (புரட்டாசி 7) தேதி பெயர்ச்சி ஆகின்றனர்.
இந்த பெயர்ச்சியின் போது ராகு பகவான் மிதுன ராசியின் மிருகசீர்டிஅம் 3ம் பாதத்திலிருந்து ரிஷப ராசி மிருகசீரிடம் 2ம் பாதத்திற்கு செல்கிறார்.
அதே போல் கேது பகவான் தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரம் 1 பாதத்திலிருந்து விருச்சிகத்தில் இருக்கும் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்திற்கு பெயர்கிறார்.

ராகு கேது பெயர்ச்சி மட்டுமல்லாமல், நவம்பரில் நடக்கும் குரு பெயர்ச்சியும், டிசம்பரில் நடக்கும் சனி பெயர்ச்சியும் மகர ராசிக்கான பலன்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
மகரம் பொது பலன்கள்
கேது 11ம் இடத்திற்கு வருவதால் ஏற்கனவே ஏழரை சனியால் பல தொல்லைகளை அனுபவித்து சாமியாராகப் போய்விடலாம் என நினைக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு, ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். சமூக பணியில் ஈடுபடுபவர்கள் மேன்மை அடைவார்கள்.
சிலருக்கு எதிர்பாரத பண வரவும், வாகன சேர்க்கையும் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் விஷயத்தில் கவன தேவை. பயணங்கள் வெற்றியைத் தருவதாக அமையும்.
கணவருடன் இருக்கும் அன்பும், அனுசரனை சுமாராக இருக்கும். பூர்விக சொத்து கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாரிடமும் இரவல் நகை, பொருள் வாங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். அலுவலக, வீட்டின் முக்கிய கோப்புக்களை பத்திரமாக வைப்பதோடு, கையாள்வதில் கவனம் தேவை. அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
ஏற்கனவே ஏழரை சனி காரணமாக கல்வியில் பெரிய ஆர்வம் இல்லாத மாணவர்கள். மேலும் நிலை மோசமாக தான் இருக்கும். அக்கறை எடுத்து படிப்பது அவசியம். அதோடு நல்ல பழக்கம் கொண்ட மாணவர்களுடன் மட்டும் சேர்வது நல்லது.
தேவையற்ற வாக்குவாதங்களையும், சகவாசங்களையும் குறைத்துக் கொள்வது அவசியம். விளையாட்டு துறையில் இருக்கும் மாணவர்களுக்கு தவறிப்போன வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது.
மகர ராசியினர் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும், இந்த பெயர்ச்சி உங்களுக்கு புதிய பொறுப்புகள் தருவதோடு, அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படும்.
இருப்பினும் உங்களின் செயல்பாடுகளுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு, பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
எது எப்படி இருந்தாலும் உங்களின் கடின உழைப்பை விட்டு விடாதீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று அனுசரித்துச் செல்வதால், அவர்களின் ஆதரவு கிடைக்கும். இல்லையென்றால் பணியில் தேவையற்ற கஷ்டம் சந்திக்க வேண்டி வரும்.
உங்களின் உழைப்பு ஏற்ற அல்லது அதிகமான நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறலாம்.
வழிபாடு
சனி பகவான் ஆட்சி செய்யும் மகர ராசியில் பிறந்த நீங்கள் கணபதியை வணங்குவதும், ஆஞ்சநேயரை வணங்கி வருவதால் சனி பகவானின் நல்ல பார்வை கிடைக்கும்.
நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட்டு, அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுங்கள்.