இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பாத்தா..!! இது பீரே அடிக்குது..!! நான் குடிக்கும் முதல் பீர் சூப்பர் சிங்கர் பிரகதி..!!

கிசுகிசு

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சா திக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

இத ஏன் இப்போ கிளறுறான் ? என்றுதானே பார்க்கிறீர்கள். விஷயம் இல்லாமலா கொஞ்சம் பொறுங்க பாஸ் ! அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளமெர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க பீர் குடிங்க வேண்டாம் சொல்லல ஆனா இப்படி பப்ளிக்கா புகைப்படம் போடாதீர்கள் என்று கூறியுள்ளனர். அவர் அந்த புகைப்படத்தில் நான் குடிக்கும் முதல் பீர் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். வெளிநாடுகளில் இது போன்ற பழக்க வழக்கங்கள் சகஜம் தான், ஆனால் என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பொண்ணு பிரகதி பாஸ் சும்மாவா இருக்க முடியும் ?