இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா? இவர் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை!! யாருன்னு நீங்களே பாருங்க ஷா க் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில், நம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று, இந்த சீரியலின் கதையை ஒன் லைனில் சொல்ல வேண்டும் என்றால், ஆனந்தம், சமுத்திரம் போன்ற கூட்டுக் குடும்ப படங்களின் சீரியல் தொகுப்பு என்று கூட சொல்லலாம்.

இதிலும் ஆனந்தம் படத்தில் வருவது போல், நான்கு அண்ணன் தம்பிகள், ஒரு மளிகை கடை, பொறுப்பான மூத்த மருமகள் இவர்கள் தான், அந்த கடையின் இல்லை கதையின் முக்கிய தூண்கள். இந்தக் கதையின் சுருக்கம் என்ன வென்றால், அண்ணியின் பொறுப்பில் வளரும், மீதம் இருக்கும் தம்பிகளுக்கு, அண்ணியாக மட்டுமில்லாமல், அன்னையாகவும் இருப்பவர் தான்.

மூத்த மருமகள் தனம் அதன் பின் முல்லை ஜீவாவினை காதலிக்க, ஜீவாவோ மீனாவை காதலிக்கிறார். வீட்டில் இருப்பவர்கள், முல்லைக்கும், ஜீவாவிற்கும் திருமணம் பேசி முடிக்க, மீனா களத்தில் இறங்குகிறாள். அதனால் வேறு வழியின்றி, முல்லையை கதிர் திருமணம் செய்துக் கொள்கிறான். இதில் மீனா கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை ஹேமா,

இவரின் டைமிங் கவுன்டரிக்கும், மயின்ட் வாய்ஸ்க்கும் என்றே பல ரசிகர்கள் அவர்களுக்கு இருக்கின்றனர், உண்மையில் செல்வ செழிப்போடு வாழ்ந்த ஒரு பெண் சாதாரண கூட்டு குடும்பத்தில் சி க்கிக் கொண்டு அவர் சந்திக்கும் பி ரச்சனைகளை கலகலப்பாக அவர் வெளிப்படுத்தும் விதம் பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையை ஒத்து போவது போல் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாப் பக்கத்தில் அவர் கல்லூரி கால புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அதைப் பார்த்த பலரும் உண்மையாவே நீங்களா இது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.