இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…! தென்னிந்தியாவையே கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகை…! யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க…!

Uncategorized

பிரபல இளம் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம் ஒன்று இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. விஜய்,சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா,ரஜினிகாந்த் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம்,தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைய்லட் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே அனைவரும் வியந்து பார்க்கும் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இவர் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து ரிங் மாஸ்டர் என்ற மற்றொரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இந்த நிலையில் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து இருப்பார்.

 

 

முதல் படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கீர்த்தி சுரேஷ் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் இது என்ன மாயம் படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து சூப்பர் ஹிட் கூட்டணியான சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவான ரஜினி முருகனில் நடித்து ஒரே படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறினார்.ரஜினிமுருகன் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த பின் தெலுங்கிலும் நேனு சைலஜா என்ற படத்தில் நடித்து அங்கும் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே தவிர்க்கமுடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம்,விஜய் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இன்னும் ஒரு மாதத்தில் இதன் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவில் அதிரடி காட்டிய கீர்த்தி சுரேஷ் ஹிந்தியிலும் கால் தடத்தை பாதிக்க இருந்தார். அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த கீர்த்தி சுரேஷ் அஜய்தேவ்கானுக்கு மனைவியாக நடிக்க இருந்தார்.

 

ஆனால் பார்க்க மிகவும் இளமையாக தெரிவதால் அந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். பெண் குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களை தொடர்ந்து இப்பொழுது குட்லக் சகி, மரக்கார்,சர்க்காரு வாரி பாட்டா,ரங் தே, வாஷி, சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்க குழந்தை பருவத்தில் அப்பா சுரேஷ்குமாருடன் எடுத்துக்கொண்ட க்யூட்டான புகைப்படம் இப்போது வைரல் ஆகி வருகிறது.