இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம்..!!இது பலரின் பார்வைக்கு வந்திருக்காது . இந்த படத்திற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது..!!

செய்திகள்

SPB இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் ஆன புகைப்படம் . எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் .

இது பலரின் பார்வைக்கு வந்திருக்காது . இந்த படத்திற்கு பின்னால் ஒரு கதையே இருக்கிறது.நடிகர் மயில்சாமி மிகச்சிறந்த அண்ணாமலையார் பக்தர் . எப்போதெல்லாம் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய தோன்றுகிறதோ அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு ஓடி வந்துவிடுபவர் .

கார்த்திகை தீபத்திருவிழா என்றால் திருவண்ணாமலையை விட்டு எங்கும் நகர மாட்டார் . பத்தாம் நாள் திருவிழாவில் மனிதர் கோயிலுக்குள் தான் இருப்பார் .

அவருக்கு ஒரு ஆசை . பத்தாம் நாள் திருவிழாவில் மகாதீபம் ஏற்றும் சமயத்தில் ஆலயம் உள்ளே பல நூறு பக்தர்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் SPB அவர்களை எப்படியாவது அழைத்து வந்து பக்தி பாடல்களை பாடச்செய்வது என்பதுதான் .

அதற்காகவே SPB அவர்களிடத்தில் அடிக்கடி வேண்டிக் கொண்டிருப்பார் . பாலு சாருக்கும் அண்ணாமலையாரை த ரிசனம் செய்ய வேண்டும் , முக்கியமான அந்த தீபத்திருவிழாவில் அவர் குரல் அண்ணாமலையார் ஆலயத்தில் ஒலிக்க வேண்டும் என்பது விருப்பம் தான் . ஆனால் சுமார் இருபது லட்சம் பேர் கலந்து கொள்ளும் விழாவில் , கூட்டத்தில் எப்படி போவது வருவது என்ற தயக்கம் .

“அண்ணே … நீங்க வாங்க , உங்களை எப்படியாவது கோயிலுக்குள் அழைத்து செல்வது என் பொறுப்பு ” இப்படி மயில்சாமி அவர்கள் சொல்ல , பாலு சாரும் ஓகே நான் திருவண்ணாமலைக்கு வரேன் பாடுறேன் என்று ஒப்புக் கொண்டார் .

பத்தாம் நாள் திருவிழா , மயில்சாமி அவர்கள் கோயிலுக்குள் இருக்கும் நேரத்தில் , பாலு சார் திருவண்ணாமலைக்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில் நான் இருக்கிறேன் என்று தகவல் தந்ததும் மயில்சாமி பாலு சார் கார் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை நகருக்கு அழைத்து வருகிறார் . அவருக்காக தனியே ஒரு தங்கும் விடுதியில் அறை தயாராக இருக்கிறது .

விடுதியை நோக்கி கார் செல்ல முயலும் போது ஒரு காவலர் தடுக்கிறார் . இந்த வழியாக காரை அனுமதிக்க முடியாது என்று . மயில்சாமி பதறிப்போய் விடுகிறார் . உள்ளே பாலு சார் இருக்கிறார் . அவர் கோயிலுக்கு உள்ளே பாட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று எடுத்துச் சொல்லியும் காவலர் ம றுத்து விட , நல்லவேளை மயில்சாமி அவர்களுக்கு தெரிந்த மற்றொரு காவலர் சூழ்நிலைகளை புரிந்து விடுதிக்கு காரை கொண்டு செல்ல வழி செய்கிறார் .

விடுதிக்கு பாலு சார் வந்து சேர்ந்தாலும் மயில்சாமி அவர்களுக்கு இந்த நிகழ்வு மிகப்பெரிய வ ருத்தத்தை தந்தது . நாம் அவரை வ ற்புறுத்தி அழைத்து வந்து கோயிலுக்குள் அழைத்து செல்வதில் சி க்கல் உண்டானால் என்ன செய்வது என்ற க வலை ஒரு புறம் , அந்த காவலர் நடந்து கொண்டது மறுபுறம் . நேராக கலெக்டர் சாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு சூழ்நிலையை சொன்னார் .

அவ்வளவுதான் … பாலு சார் தற்போது எங்கே இருக்கிறார் ? அவரை நம்ம வீட்டிற்கு அழைத்து வந்துவிடுங்கள் மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கலெக்டர் கந்தசாமி சார் .

அங்கிருந்து பாலு சாரை அழைத்துக்கொண்டு மயில்சாமி அவர்கள் கலெக்டரின் வீட்டிற்கு சென்று விடுகிறார் . அங்கு பாலு சாருக்கு மிகப்பெரிய மரியாதையும் , உற்சாகமான வரவேற்பு கிடைத்தது .

“சொல்லுங்கள் மயில்சாமி நான் என்ன செய்ய வேண்டும் ” என்று கலெக்டர் கேட்க, பாலு அண்ணாவை பத்திரமாக கோயிலுக்குள் அவர் பாடல் பாடும் இடம் வரை அழைத்து போக உதவி செய்தால் நன்றாக இருக்கும் சார் என்கிறார் மயில்சாமி .

உடனே கலெக்டர் அவர்கள் தன்னுடைய காரில் பாலு சாரை ஏற்றிக்கொள்கிறார் . கலெக்டரின் கார் கோயிலை நோக்கி ப றக்கிறது சை ரைன் ச த்தத்தோடு . அந்த காட்சியை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் . ஏ கே 4 7 து ப்பாக்கி கொண்ட கா வலர்கள் இருவர் உடன் இருக்க , பாலு சாரை பத்திரமாக கோயிலுக்குள் அழைத்து சென்றார் கலெக்டர் கந்தசாமி அவர்கள் .

அன்றைய நாளில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்த பின்னர் பக்தி பாடல்களை பாடி பாடி கார்த்திகை தீபத்திருவிழா பத்தாம் நாளை பக்தர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாற்றி விடுகிறார் பாலு சார் .

அந்த விழா முடிந்ததும் மயில்சாமி அவர்களுக்கு மனதார நன்றி சொல்கிறார் பாலு சார் . பல இலட்சம் பக்தர்கள் கூடியிருந்த திருவிழாவில் இப்படி ஒரு தரிசனம் , இப்படி ஒரு பாடல் பாடும் வாய்ப்பு அமைந்தது உன்னால் தான் என்று நெ கிழ்ந்து போகிறார் SPB அவர்கள் .

இது உங்களுக்கு இன்று தெரியப்படுத்த தோன்றியதால் விரிவாக எழுதினேன் .அந்த நாளின் நிகழ்வு தான் இந்த புகைப்படம் .