தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் பேசும் நடிகைகள் குறைந்த நிலையில் இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க இவரின் நடிப்புன் பலரை ஈர்த்தது.
இதையடுத்து படங்கள் சரியாக அமையாததால், மொட்டை மாடி போட்டோஹுட் மூலம் பல இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார். இதையடுத்து இணையம் பக்கமே இருந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் தன் பார்வைக்கு கொண்டுவந்தார்.
தற்போது அதன்மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்களின் வாழ்க்கை குடும்பம் பற்றி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது நடிகை ரம்யா பாண்டியனின் குடும்பம் பற்றியும் புகைப்படங்களை பற்றியும் பேசி வருகிறார்கள்.
அந்தவகையில் ரம்யா பாண்டியனின் தந்தை இவர் தான் என்று முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் அருண் பாண்டியன் உண்மையில் நடிகை ரம்யா பாண்டியனின் தந்தை கிடையாது.
தந்தையின் சகோதரர் தான் நடிகர் அருண் பாண்டியன். அவரின் மகள் கீர்த்தி பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.