இத்தனை சத்துக்கள் வெண்ணெயில் உள்ளதா? இந்த சத்துக்கள் கொண்ட வெண்ணெய்யை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது… என்று தெரிஞ்சிகோங்க…!!

உணவே மருந்து

கொழுப்பை அதிகரித்து எடையை கூட்டி விடும் என்பதால் பலரும் வெண்ணெயை தவிர்ப்போம்.

தயிரைக் கசக்கி, வீட்டில் தயாரிக்கப்படும் வெண்ணெய் அல்லது சுத்தமான வெண்ணெய் சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற பலன்களை பெறலாம்.

வெண்ணெயில் இருக்கும் சத்துக்கள்:

வெண்ணெயில் விட்டமின்கள் A, D, K2 மற்றும் E, அயோடின், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகளும் இருக்கின்றன.

வளரும் குழந்தைகளுக்கு:

தூய வெண்ணெய் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வெண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு ஆகியவை குழந்தைகளின் மூளை சக்தியை அதிகரிக்கும்.

குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும்.

பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.

பலன்கள்:

வெண்ணெயில் இருக்கும் கிளைகோஸ்பிங்கோலிப்பிடு என்ற கொழுப்பு அமிலமானது மெல்லிய சவ்வினை ஏற்படுத்தி பக்டீரியா தொற்றுதலால் சிறுகுடலில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்கிறது.

உடலுக்கு நலத்தினைத் தரும் நல்ல கொழுப்பினான ஒமேகா-3 நிறைந்துள்ளது, இதிலிருக்கும் விட்டமின் ஏ தைராய்டு குறைபாட்டால் ஏற்படும் நோய்களை சரிசெய்கிறது.

வெண்ணெயானது கரோடீனாய்டுகளை அதிகளவு கொண்டுள்ளது. இந்த கரோடீனாய்டுகள் கண்களின் பாதுகாப்பிற்கு முக்கிய காரணியாக உள்ளது.

வெண்ணெயில் காணப்படும் மாங்கனீசு, துத்தநாகம், செம்பு மற்றும் செலீனியம் போன்ற தாதுஉப்புக்கள் எலும்புகளின் மறுவளர்ச்சி உதவுகிறது

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும்.

உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.