இதுவரை யாரும் பார்த்திடாத சாவித்திரியின் மகள் புகைப்படம்.. நடிகையர் திலகம் மாதிரியே இருக்காங்களே..!!

செய்திகள்

‘நடிகையர் திலகம்’ என்ற கௌரவத்துடன் தமிழ், தெலுங்கு சினிமாவில் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை சாவித்திரி.இவருடைய வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற தலைப்பில் படமாக்கப்பட்டு பல விருதுகளை தட்டிச் சென்றது.

சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார்.

இதில் சாமுண்டீஸ்வரி தனது அப்பா ஜெமினி கணேசனின் தோள் மீது கையை வைத்து கியூட்டா போஸ் கொடுத்துள்ளார்.

அதேபோல் சாமுண்டீஸ்வரியின் தம்பி சதீஷ் குழந்தையாக அம்மாவின் மடியில் இருந்த படி அப்பா கொஞ்சுவது போல் இருக்கும் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இப்படி பல்வேறு சுவாரஸ்யம் நிறைந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது பெற்றோரின் ஞாபகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.

இந்தப் புகைப்படங்களில் நடிகை சாவித்ரியின் கணவர் காதல் மன்னனாக வலம் வரும் ஜெமினிகணேசனும் குழந்தைகளை கொஞ்சியபடி இருப்பதால், இந்த போட்டோஸ்க்களை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.

மேலும் விஜய சாமுண்டீஸ்வரி சமீபத்திய புகைப்படத்தை  பார்க்கும்போது அச்சு அசல் அவருடைய அம்மா சாவித்திரி போலவே இருப்பதால் ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்