இணையத்தை கலக்கும் நடிகர் அர்ஜூனின் நிச்சயதார்த்த புகைப்படம்! அவரது மடியில் இருப்பது யார் தெரியுதா?ஒருகணம் கண்கலங்கிய ரசிகர்கள்!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, ஆக்சன் கிங்காக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி கொடிகட்டி பறந்தவர் நடிகர் அர்ஜுன். அவரது படங்கள் என்றால் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அதற்கு காரணம் அவர் நாட்டுப்பற்று மிகுந்த, தேசிய கருத்து நிறைந்த படங்களிலேயே பெருமளவில் நடித்திருப்பார்.

குறிப்பாக நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. நடிகர் அர்ஜுன் தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  அவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

>

இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் அப்புகைப்படத்தில் நடிகர் அர்ஜூனின் மடியில் குழந்தையாக அர்ஜூனின் மருமகனும், 39 வயதில் காலமான  ரசிகர்களை மீளா துயரில் ஆற்றிய கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா அ மர்ந்துள்ளார். இப்புகைப்படத்தில் அர்ஜுனை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுகணம் சிரஞ்சீவியை எண்ணி வருத்தமும் அடைகின்றனர்.