இசை ஞானியின் அந்த ஒரு குறிப்பிட்ட வீடியோவை போட்டு காண்பித்த போது எஸ்.பி.பியின் ஒரு ரியக்சன்! உண்மையை உடைத்த மருத்துவர்கள்?

வைரல் வீடீயோஸ்

இளையராஜா அவர்கள் எஸ் பி பியின் மறைவிற்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோவில், நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவில் மட்டும் முடிந்து போவது அல்ல. சினிமாவில் மூலம் துவங்கியதும் அல்ல.

எங்கேயோ மேடை கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி.அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கும் முக்கியமான ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பு இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ அதே போல நம்மை எந்த காலத்திலும் பிறிக்க முடியாது.

நாம் சண்டை போட்டாலும் சரி, நாம் இருவருக்குள் சண்டை இருந்தாலும் அது நட்பே. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் சீக்கிரம் வா என்று கூறியிருந்தார்.இளையராஜா பேசிய அந்த வீடியோவை அடிக்கடி சரண் எஸ்பிபிக்கு போட்டுக் காண்பிப்பார். பொதுவாக இதுபோல ஏதாவது காட்டினால் அதற்கு அவர் சின்னதாக ஒருசைகையையோ அல்லது புன்னகையோ தான் கொடுப்பார்.

ஆனால் இளையராஜாவின் வீடியோவை போட்டபோது எஸ் பி பி, சரனை அருகில் அழைத்து அவரிடம் போனை வாங்கி முத்தம் கொடுத்தார்.அவர் பெரிதாக அசைவு கொடுத்தது அப்போதுதான் என்று எஸ் பி பிக்கு சிகிச்சை பார்த்த டாக்டர் தீபக் சுப்ரமணியம் கூறியுள்ளார்.என்ன தான் சண்டைகள் இருந்தாலும் நட்புக்கு எந்த ஒரு களங்கமும் இருக்காது என்பதற்கு எஸ்.பி.பி ஒரு மிக சிறந்த உதாரணம்.